திருவாரூரில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதர்ணா போராட்டம்…
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு திருவாரூர் மாவட்டம் சார்பில் மாவட்ட அளவிலான தர்ணா போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் முன்பு நடைபெற்றது அமைப்பின் மாவட்ட தலைவர் எம் சண்முகம் தலைமை வகித்தார்
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் நல அமைப்பு தலைவர் அமல் தாஸ் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் நல அமைப்பு செயலாளர் அண்ணாதுரை மின்சார வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட தலைவர் ராமசாமி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்க கோவிந்தராஜ் ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி புவனேஸ்வரி தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் குரு சந்திரசேகரன் கண்டன உரையாற்றினார் கண்டன தர்ணா ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசே தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துக 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கிடுக தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களும் பொதுப்பணி துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 வழங்கிட வேண்டும் மருத்துவ காப்பீடு நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் காப்பீட்டில் காசு இல்லா மருத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் மருத்துவ காப்பீடு நடைமுறையில் இல்லாத ஓய்வு பெற்ற அனைத்து பகுதிகளினருக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை வழங்கிட வேண்டும் அகவிலைப்படி உயர்வை ஊதியர்களுக்கு வழங்குவது போல் பொதுப்பணித்துறை ஓய்வு ஊதியர்களுக்கும், ஒன்றிய அறிவித்த அதே நாளில் வழங்கிட வேண்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு ஊதியர்களுக்கு 2015 ஆம் ஆண்டு முதல் 2024 வரை வழங்கவில்லை வைத்துள்ள தொகை அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் கம்யூ டேசன் பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் அண்மையில் நீதிமன்றங்கள் பத்து ஆண்டுகள் முடித்தவர்களுக்கு கம்யூ டேசன் பிடித்தம் செய்யாததற்கு தடையானை வழங்கி உள்ளதை திரும்ப பெற வேண்டும் பணிக்கொடை வழங்கும் உச்சவரம்பு 25 லட்சத்தை அரசு ஓய்வு ஊதியர்களுக்கு வழங்கியதை போல் பொதுத்துறை ஓய்வு ஊதியர்களுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது தர்மா ஆர்ப்பாட்டத்தின் முன்னதாக கூட்ட அமைப்பின் மாவட்ட செயலாளர் வி முனியன் வரவேற்றார்.
இறுதியாக தமிழ்நாடு மின்சார வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட செயலாளர் குமார் நன்றி கூறினார்