போச்சம்பள்ளி பகுதியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய தேமுதிக அவைத்தலைவர் இளங்கோ
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்றது. போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி கோடிக்கரை வழியாக கிராம பகுதிக்குள் தண்ணீர் சுழ்ந்தது. இதனால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அந்தவகையில் போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொது மக்களை தேமுதிக அவைத்தலைவர் இளங்கோ நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திராபுரி கிராத்தில் பார்வையிட சென்றபோது பாதிக்கப்பட்ட மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி அவைத்தலைவர் இளகோவிடம், பாதிப்பு குறித்து எடுத்து கூறினர்.
அதற்கு பதிலளித்த இளங்கோ மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்து நிவாண பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்தாக உறுதியளித்தார். இந்த நிகழ்வின்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே ஆர் சின்னராஜ், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் விஜய சங்கர், மேற்கு மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் முருகேசன், மாவட்டத் துணைச் செயலாளர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் வேலு, காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் விஜய், வல்லரசு ஒன்றிய பொருளாளர் கணக்கன், பர்கூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பழனி திருநாவுக்கரசு, மத்தூர் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் விவேகானந்தன், அன்பு, ஊத்தங்கரை கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல், மேற்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ், பேரூராட்சி செயலாளர், துரை அரசம்பட்டி வேலு சண்முகம் எக்ஸ் ஆர்மி ஒன்றிய நிர்வாகிகள் ஊராட்சி செயலாளர்கள் கிளைக்கழக செயலாளர்கள் கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.