நாமக்கல் மாவட்டம் .
பரமத்தி வேலூர்
திருமணிமுத்தாற்றில் 6000 கனஅடி தண்ணீர் செல்வதால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளன. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ள து.இந்த நிலையில் பரமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் திருமணிமுத்தாற்றில் செல்லும் வெள்ள நீர் சாக்கடை வழியாக அப்பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. காந்திநகர் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து அங்கு வசித்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனை அடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளை திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி ஆய்வு செய்து வெள்ள பாதிப்புகளில் பாதிக்கப்படுபவர்களை உடனடியாக மீட்க அனைத்து துறை அலுவலர்களையும் தயாராக இருக்கும்படி அறிவித்தார்.
இந்த நிலையில் பரமத்தி வேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் குப்பிச்சிபாளையம் இடும்பன் குளம் அருகே செல்லும் திருமணிமுத்தாற்றில் வெள்ளம் பாலத்தை மூழ்கி செல்லும் நிலையில் ஆபத்தை உணராமல் பொதுமக்களோடு பெண் காவலர்களும் செல்பி எடுத்து செல்கின்றனர். அதேபோல் காந்தி நகர் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கும் நிலை உள்ளதால் அதிகாரிகள் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.