மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(63) இவர் ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர். கடந்த 2018-ம் ஆண்டு வாடிப்பட்டி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் நஷ்டஈடு கோரி, திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி இழப்பீடு வழங்காததால் ராஜேந்திரன் தரப்பில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து நீதிபதி அவர்கள் அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து நீதிமன்ற கட்டளை நிறைவேற்றுனர்கள்,
ராஜேந்திரன், வழக்கறிஞர் கார்த்திக் முன்னிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து ஜப்தி செய்து திண்டுக்கல் நீதிமன்றம் கொண்டு சென்றனர்.