எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு வழக்கறிஞர் சங்க தலைவர் ஸ்டாலின், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் வழக்கறிஞர்களை கண்ணியமற்ற முறையில் பேசியதை கண்டித்தும்,காவல் நிலையம் வரக்கூடாது என்று கூறியதை கண்டித்தும்,பொறையார் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணை ஒன்றிக்கு சென்ற வழக்கறிஞரை தாக்கிய, சம்பந்தபட்ட நபர்களை கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சிய போக்குடன் செயல்பட்டு வரும் பொறையார் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை வேண்டியும்,
சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளரை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் போது முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.