வடுகபட்டி கிராமத்தில் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அழகுமலையான் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வடுகபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அலகுமலையான் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கள இசை முழங்க கோ பூஜை, கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அதனை தொடர்ந்து முதல் கால யாகவேள்வி ஆரம்பமாகி மகா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து மூன்று கால யாகபூஜையுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கருவறையில் உள்ள தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கோவிலுக்கு வருகை தந்த ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார் அவருக்கு கோவில் விழா கமிட்டி சார்பாக கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்றனர்

தொடர்ந்து பக்தர்களுக்கு பூஜை மலர்களும், பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *