சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெஞ்சல் புயல் காரணமாக பெரு மழை பெய்தது. இதில் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு சார்பில் பல்வேறு உதவிகள் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். அரசியல் கட்சினரும், பல்வேறு அமைப்பினரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ, பேரூராட்சி மண்டல இணை இயக்குனர் மாகின் அபூபக்கர் ஆகியோர் உத்தரவின் பேரில், வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் பெரும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க பிஸ்கட், தண்ணீர் பாட்டில், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு மினி வேன் வாகனத்தில் ஏற்றி திருவாரூருக்கு அனுப்பும் நிகழ்ச்சி வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் சரவணன் தலைமையில், வலங்கைமான் நகர திமுக செயலாளர் பா. சிவனேசன்,திமுக அவைத் தலைவர் சோம. மாணிக்கவாசகம், பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க. தனித்தமிழ் மாறன் ஆகியோர் முன்னிலையில் நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை வழி அனுப்பி வைத்தனர்.
க.செல்வம, ஆனந்தகுமார் உள்ளிட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.