டாக்டர் அம்பேத்கரின் 68 வது நினைவு தினத்தை முன்னிட்டு மாதவரம் தபால் பெட்டி பகுதியில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
மாதவரம் கே. நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பி. எஸ். பி.கட்சியின் மாநில தலைவர் பி .ஆனந்தன், மாநில பொதுச் செயலாளர் சேகர் , மாநில செயலாளர் புழல் பெரியார் அன்பன் மற்றும் நிர்வாகிகள் , தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
முன்னதாக முன்னால் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி ஜெய்பீம் என்ற கோஷத்துடன் அனைவரும் முழங்கினர் .இதில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.