கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68 ஆவது நினைவு தினத்தை ஒட்டி அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு கும்பகோணம் எம்எல்ஏ மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சட்டமாமேதை டாக்டர் பி .ஆர். அம்பேத்கர் அவர்களின் 68 வது நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணம் சோழன் போக்குவரத்துக் கழகம் முன்பு டாக்டர் பி. ஆர் .அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் சுரேஷ், சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகி அண்ணாதுரை மற்றும் போக்குவரத்து துறை நிர்வாகிகள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.