விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட 31,வது வார்டு பகுதியான திருவனந்தபுரம் தெரு (பச்சமடம்)
இங்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெருக்களில் தார்,மற்றும் சிமென்ட் சாலைகள் போட ஒப்பந்தம் போடப்பட்டு படிப்படியாக வேலைகள் நடைபெற்றுவந்த நிலையில் ஒரு மூன்று தெருக்களில் மட்டும் பேவர் பிளாக் சாலை என்று போடுவதற்கு ஏற்பாடுகள் செய்வதாக கூறப்பட்டது
ஆனால் இந்த மூன்று தெருக்களில் வசிக்கும் மக்கள் இந்த தெருக்கள் மிகவும் நீலமாகவும் தென்காசி சாலையில் ஏதாவது போக்குவரத்து பிரச்சனை என்றால் இந்த சாலைகளின் வழியாக வானங்களை திருப்பி விடப்பட்டு சங்கரன்கோவில் சாலை வழியாக செல்வதற்கு வழிவகை செய்யப்படுகிறது
அதிக வாகனங்கள் செல்லும் சாலையாக உள்ளது பேவர் பிளாக் பதித்தால் தரமாக இருக்காது சில நாட்களிலே சேதமடைந்து ஆங்காங்கே மேடு பள்ளமாகி பிரச்சனைகளை ஏற்படுத்துவதால் தார்,சாலை அமைத்து தர கோரிக்கை வைக்கப்பட்டது ஆகயால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது தற்போது இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் நொந்துபோய் உள்ளனர்
இதுகுறித்து நகர் மன்ற உறுப்பினரிடம் கேட்டபோது இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு பல முறை கேட்டபோது தீர்மானம் நிறைவேற்றி அனுமதி கோரியுள்ளோம் அனுமதி கிடைத்தவுடன் வேலைகள் நடைபெரும் என்றனர்
இரண்டரை வருடம் காலதாமதம் செய்துவிட்டு தற்போது மீண்டும் பேவர் பிளாக் சாலை என்றால் கூறுங்கள் ஏற்பாடு செய்கிறோம் தார் சாலை அமைக்க தற்போது சாத்தியமில்லை என்கின்றனர் இங்கு குடியிருப்புவாசிகள் என்னிடம் தினமும் சந்தித்து வாகன ஓட்டிகளும் வயோதியர்களும் தினமும் இதனால் வயிறு மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்படுகிறோம், விரைந்து நடவடிக்கை எடுங்கள் இல்லையென்றால்,நாங்கள் பொதுமக்களை திரட்டி,
நகராட்சி முற்றுகை போராட்டம் நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவா என்கின்றனர் பதில் கூற இயலாமல் தவித்து வருகிறோம் என்றார்,மேலும் இங்கு வசிப்பவர்கள் நம்மிடம் கூறும்போது,
இந்த மூன்று தார்,சாலைகள் மேலும் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை இருபுரமும் குப்பைகள் கொட்டப்பட்டு மழை காலங்களில் சேறும் சகதியுமாக மிகவும் அருவருப்பாக உள்ளது இதற்கும் தார் சாலை வேண்டும் ஊரணியை சுற்றி வேலி அமைத்து நடை பயிற்சி செய்ய நடை பாதை சிறுவர் பூங்கா என்று ஒப்பந்தம் போடப்பட்டு பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு தரவும்
வருடக் கணக்கில்,புலம்பித் தவிக்கிறோம் இது எதையும் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்,வீட்டு வரி
தண்ணீர் வரி பாதாள சாக்கடை வரி பின்னர் அனைத்துக்கும் ஆயிரக்கணக்கில் முன் பனம் ,என்று பலதரப்பட்ட வசூலில் மட்டுமே முனைப்பு காட்டுகிறது இங்கு வாழ்வதா அல்லது ஊரை காலி செய்துவிட்டு எங்காவது ஓடிவிடுவதா என்று மிகவும் வேதனையுடன் கூறுகின்றனர், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுமா நகராட்சி நிர்வாகம்,