போச்சம்பள்ளி அடுத்த சுண்டக்காபட்டி கிராமத்தில் அரச மரம் வேப்பமரம் இரு மரங்களுக்கும் கிராம மக்கள் ஒன்று கூடி திருமணம் செய்து வைத்து வழிபாட்ட கிராமத்தினர்

கிருஷ்ணகிரி மாவட்டம்
ஆவத்துவாடி ஊராட்சிக்கு உட்பட்ட சுண்டகாபட்டி கிராமத்தில் கோவில் அருகாமையில் உள்ள அரசு மரத்திற்கும்
வேப்பமரத்துக்கும் கிராமமே ஒன்று சேர்ந்து திருமண நிகழ்வு நடத்தினர் பால் அபிஷேகம் நடைபெற்றது

இதை தொடர்ந்து சிவசொருபமான அரசமரத்திற்கும் பார்வதி சொருபமான வேப்பமரத்துக்கும் மாங்கல்யம் இசை வாத்தியங்கள் முழுங்க இரு மரத்திற்கும் திருமணம் செய்து வைத்தனர் பிறகு மாப்பிள்ளை விட்டார் பெண் விட்டார் என ஊர் பொதுமக்களும் 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள்
தட்டுவரிசை சீராக எடுத்து வந்து கோயில் அருகே வைத்து பாரம்பரியம் முறைப்படி இரு மரங்களுக்கு திருமணம் செய்து வைத்தானர்

இதை தொடர்ந்து சாமிகளுக்கு மொய் கொடுக்கும் நிகழ்வு மற்றும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஊர் கவுண்டர்கள் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *