கோவை வெள்ளலூர் வள்ளலார் காலனியில் அண்ணல் அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சிறுபான்மை துறை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி அம்பேத்கர் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்..
நாடு முழுவதும் அண்ணல் அம்பேத்கரின் 68 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது..இந்நிலையில் கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள 6 வது வார்டு வள்ளலார் காலனியில் அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது..
ராவ் சாகிப் எல்.சி.குருசாமி கல்வி மையம்,நீலம் பண்பாட்டு மையம் ஆகியோர் ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில்,
சிறப்பு விருந்தினராக தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி கலந்து கொண்டு அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி, சமதர்ம சமுதாயத்தை நிலை நிறுத்திய அனைவருக்குமான தலைவர் அண்ணல் அம்பேத்கர் என புகழாரம் சூட்டினார்.
முன்னதாக நிமிர்வு பறையிசை குழுவினரின் பறையிசை நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..
இந்நிகழ்ச்சியில்,சங்கர் சமூகநீதி அறக்கட்டளை கவுசல்யா,
நீலம் பண்பாட்டு மையம் மற்றும் எல்.சி.குருசாமி கல்வி மையத்தின் பல்வேறு நிலை நிர்வாகிகள் மகேந்திரன்,
சூர்யகுமார்,கருணாநிதி,ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ரங்கநாதன்,
ஆசிரியர் சக்திவேல்,ராஜேந்திரன், லோகியா,சந்திரசேகர், உதயா மற்றும் இரவு நேர பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..