தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டியில் இயங்கி வரும் மாபெரும் கல்வி சிறந்ததொரு நிறுவனமான நாடார் சரஸ்வதி குழுமத்தின் ஒரு அங்கமான நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை படைத்தவர் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது இந்த போட்டியில் நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் துறையின் இரண்டாம் ஆண்டு மாணவர் எம் குரு பிரசாத் 57.60 எடைப்பிரிவில் பங்கு பெற்று மாநில அளவிலான பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை படைத்தார் மேலும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் குரு காசி கல்லூரியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் அண்ணா பல்கலைக் கழகம் அணியில் பங்கு பெற தகுதி பெற்று தேனி நாடார் சரஸ்வதி கல்வி குழுமத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார் மாநில அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்ற தேனி மாணவரை தேனி மேல பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழும நிறுவனங்களின் தலைவருமான கல்வி தந்தை டி ராஜமோகன் தலைமையில் உப தலைவர் பி.பி கணேஷ் பொதுச்செயலாளர் எம் எம் ஆனந்தவேல் பொருளாளர் எம் பழனியப்பன் கல்லூரி செயலாளர்கள் ஏ ராஜ்குமார் ஏ.எஸ்.ஆர் மகேஸ்வரன் இணைச் செயலாளர் எஸ் நவீன் ராம்
கல்லூரியின் முதல்வர் டாக்டர் சி மதளை சுந்தரம் கல்லூரியின் துணை முதல்வர்கள் என் மாதவன் டாக்டர் எம் சத்யா வேலைவாய்ப்புத் துறை அலுவலர் டாக்டர் ஸ்ரீ கார்த்திகேயன் உடற்கல்வி இயக்குனர்கள் கே. சுந்தர்ராஜன் நேதாஜி ஆர் மாலினி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் குத்துச்சண்டை மாணவரின் அபார சாதனையை மனதார பாராட்டி அவர் மென்மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டுமென மனதார வாழ்த்தினார்கள் கல்லூரி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் நன்றி கூறினார்கள்
