மதுரை எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்.

மதுரை எஸ்.டி.பி.ஐ தெற்கு மற்றும் வடக்கு ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு நினைவு தினத்தினை முன்னிட்டு பாசிச எதிர்ப்பு நாள் தினமாக அனுசரித்து,
மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில்
பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, நாகம்மா கோவில் அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் வடக்கு மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் பக்ருதீன் வரவேற்புரையும், தெற்கு மாவட்ட செயலாளர் ஆரிப்கான் தொகுப்புரையும் ஆற்றினர்.

மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் தலைவர் அப்துல் காதர்
முஸ்லீம் ஐக்கிய ஜமாத் செயலாளர் நிஸ்தார் ,முஸ்லீம் ஐக்கிய ஜமாத் பொருளாளர் அப்துல் காதர் உட்பட எஸ்.டி.டி. யூ., எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணி, கல்வியாளர் அணி, பொறியாளர் அணி, ஊடக அணி, விவசாயி அணி, சோசியல் மீடியா எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில, மாவட்ட, தொகுதி, வார்டு, கிளை நிர்வாகிகள் ஜமாஅத் நிர்வாகிகள், இமாம்கள், மதச்சார்பற்ற இயக்கங்கள் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் சிராஜுதீன் , வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான் ஆகியோர் துவக்கவுரை ஆற்றினர்.
எஸ்.டி.பி.ஐ. தேசிய பொதுக்குழு உறுப்பினர்,மாநில பேச்சாளர்,கோவை ராஜா உசேன், மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் வழக்கறிஞர் ஹென்றி திபேன், ,மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிஸ்மில்லாகான், மதுரை ஜமாஅத்துல் உலமா சபை மாவட்ட தலைவர் மௌலவி சதகத்துல்லாஹ் ,எஸ்.டி.பி.ஐ. மாநில செயற்குழு உறுப்பினர், முஜிபுர்ரஹ்மான் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இறுதியில்எஸ்.டி.பி.ஐ. திருப்பரங்குன்றம் தொகுதி தலைவர் ஹாஜி அலி நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *