தேனி மாவட்டம் சட்ட மாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் ஐ. பெரியசாமி ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த 300 பயனாளிகளுக்கு ரூபாய் 3.91 கோடி மதிப்பிலான நலத்திட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார்
தேனி மாவட்டம் தேனி அல்லி நகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமி சீனியம்மாள் திருமண மண்டபத்தில் மறைந்த சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ .பெரியசாமி பல் வேறு துறைகளின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த 300 பயனாளிகளுக்கு 3.91 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி ஷஜீவனா முன்னிலையில் வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி எம்எல்ஏக்கள் ஆண்டிபட்டி ஆ. மகாராஜன் பெரியகுளம் கே எஸ் சரவணக்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் இரா ஜெயபாரதி ஊரக வளர்ச்சி திட்ட முகமையின் திட்ட இயக்குனர் அபிதா ஹனிப் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா நகராட்சி நகர் மன்ற தலைவர்கள் தேனி அல்லிநகரம் ரேணுப்பிரியா பாலமுருகன் சின்னமனூர் அய்யம்மாள் ராமு பெரியகுளம் சுமிதா சிவக்குமார் கூடலூர் பத்மாவதி லோகந்துரை கம்பம் வனிதா நெப்போலியன் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் தேனி எம் சக்கரவர்த்தி பெரியகுளம் எம் தங்கவேல் சின்னமனூர் நிவோதா அண்ணாதுரை தேனி நகர மன்ற துணைத் தலைவர் எஸ் செல்வம் திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடாசலம் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி நகராட்சி ஆணையாளர்கள் தேனி ஏகராஜ் போடி எஸ் பார்கவி சின்னமனூர் கோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்