திருவாரூர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்..
டிசம்பர் 6 பாசிச எதிர்ப்பு நாள் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு 32 ஆண்டுகால அநீதி மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே ரயில்வே சந்திப்பு நிலையம் முன்பு நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் விலாயத் உசேன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர்.தியாகு மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாயிஷா ஷபிகா ஆகியோர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்
மாவட்ட பொதுச்செயலாளர் மாஸ்.அப்துல் அஜீஸ் வரவேற்றார்
மாவட்ட துணைத் தலைவர் அப்துல் லத்தீப் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் உமர் பாரூக் மாவட்ட செயலாளர் ஜெமீன், பக்ருதீன் மற்றும் சுல்தான் ஆரூஃபின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முகமது ஜாஸ்மின் முகமது யூசுப் ஃபாருக் ஷா மற்றும் அசாருதீன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் தொகுதி நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணகயான விமன் இந்தியா மூமண்ட் மாவட்ட தலைவர் ஜுபைதா மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியாக திருவாரூர் நகர தலைவர் முகம்மது சவுக்கத் அலி நன்றி கூறினார்