திருச்சி மாவட்டம் துறையூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. துறையூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சி வெங்கடேசன் தலைமையில் முசிறி பிரிவுரோடு ரவுண்டானா அருகில் வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இதில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்