பெரம்பலூர்.
இராமச்சந்திரன்.
நீர்நிலை மற்றும் அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி வழக்கு தொடுத்தவருக்கு கொலை மிரட்டல்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அயன் பேரையூர் ஊராட்சிக்கு உட்பட்ட தைக்கால் கிராமத்தில் நீர்நிலை ஓடை புறம்போக்கு மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, வி.களத்துரை சேர்ந்த நாசர்தீன் (56) என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்நிலையில் அந்த நீர் நிலையில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்த வீடுகளை ஆறு மாதத்திற்குள் அகற்றச் சொல்லி கடந்த 12.01.2024 தேதியன்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் கடந்த 09.10.2024 தேதி என்று வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாயகிருஷ்ணன் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
அப்போது அந்த ஆக்ரமிப்பு பகுதியில் வசித்து வந்த ரஹீம்கான் த/பெ காதர்கான் என்பவருக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜனவரி மாதம் காலி செய்ய வேண்டிய சூழல் உள்ளதால் ரஹீம்கான் என்பவர் ஒரு கும்பலோடு சென்று நாசர்தீன், அவரது தம்பி மற்றும் அம்மாவிடம் அவர் கொடுத்திருந்த பொதுநல வழக்கை வாபஸ் பெறச் சொல்லி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
அவர் வழக்கை வாபஸ் பெறாத காரணத்தால் ரஹீம்கான் என்பவர் நேற்று 05.12.2024 தேதியன்று வழக்கை வாபஸ் பெறச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்ததோடு இரும்பு கம்பியால் நாசர்தீன் தம்பி மற்றும் அவரது தாயாரையும் கொலைவெறியுடன் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் பலத்த காயம் ஏற்பட்டு நாசர்தீன் தம்பி ஜமாலுதீன் என்பவர் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் எனவே தொடர்ந்து எங்களுக்கு கொலை மிரட்டல் கொடுத்து எனது தம்பி மற்றும் எனது தாயை தாக்கிய ரஹீம்கான் அவரது கும்பல்களால் எங்கள் குடும்பத்தார் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ரஹீம்கான் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நபருடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.