மதுரையில் ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு காந்தி மியூசியத்தில் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த
25 மாற்றுத் திறனாளி களை கௌரவிக்கும் விதமாக “சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளி
கள் நலவாழ்வு அலுவலர் சுவாமிநாதன் , தேவகி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் நாகேந்திரன், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அரசு வழக்கறிஞர் சக்திகுமார், மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் முனைவர் பூபதி, பாரா ஒலிம்பிக் விளையாட்டு பயிற்சியாளர் ரஞ்ஜித்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் புன்னகைப் பூக்கள் சிறப்பு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் பாலகுருசாமி ஏற்பாடு செய்திருந்தார்.