தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகரப்பகுதிகளில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினா் டாக்டர் ராணிஸ்ரீகுமார் வீதி வீதியாக சென்று வாக்களா்களுக்கு நன்றி தெரிவிப்பு.
செங்கோட்டை நகரப்பகுதிகளில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினா் டாக்டர் ராணிஸ்ரீகுமார் வீதி வீதியாக சென்று வாக்களா்களுக்கு நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகரச்செயலாளா் வழக்கறிஞா் ஆ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் ஆ.சண்முகராஜா, மு.காதர்அண்ணாவி, மாவட்ட அயலக அணி தலைவர் மு.நசீர், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் மாரியப்பன், மாவட்ட மகளிர் அணி தலைவர் பேபிரஜப்பாத்திமா, ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனைத் தொடா்ந்து காவல் நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் முழு உருவ சிலைக்கு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினா் ராணிஸ்ரீகுமார் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனா் பின்னா் திறந்த வாகனத்தில் கழக நிர்வாகிகளுடன் நகரின் அனைத்து பகுதிகளுக்கு வீதி, வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் செ.லிங்கராஜ், நகர அவைத் தலைவர் காளி, துணைச் செயலாளர்கள் ஜோதிமணி, ராஜா,
வார்டு கழக செயலாளர்கள் சேட்(எ)சேக்மதார் , இப்ராஹிம், குட்டிராஜா, விஜயபாரதன்,கோவிந்தராஜ், கருப்பசாமி, செங்கை குற்றாலிங்கம், டெய்லர் சரவணன், புலவர் மணிகண்டன், பலவேசம், மாரியப்பன், வார்டு கழக பிரதிநிதிகள் கணபதி, லியாகத்அலி, டைமண்ட்சலீம், காந்திபாபு, ஆ.சங்கர்கணேஷ், முத்துமாரியப்பன், மாதுரவீந்திரன், மனோஜ், பாகமுகவர் துரைராஜ், மணிகண்டன், ஈஸ்வரமூர்த்தி,
நகர்மன்ற உறுப்பினர் மேரி அந்தோனிராஜ், ஆர்பிஎப் மணி, பீரப்பா, வெல்டிங் மாரியப்பன், அனுராகம் மாரியப்பன் மற்றும் இந்தியா கூட்டணி தோழர்கள் நகர காங்கிரஸ் தலைவர் ராமர், நிர்வாகிகள் இசக்கியப்பன், ராஜீவ்காந்தி, சங்கரலிங்கம், நகர்மன்ற உறுப்பினா் முருகையா மற்றும் கழக உடன்பிறப்புகள் பெருந்திரளாக கலந்து கொண்டு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.