பிரார்த்தனை” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் அப்பா பாலாஜி, நடிகர் நாகமலை புதுக்கோட்டை செந்தில்குமார், ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, குழந்தை நட்சத்திரம் லியானா, தலைவர் மீனா, பிரியா, மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் இணைந்து அரையாண்டு தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், மாணவிகள் நன்றாக படித்து பரீட்சை எழுதுவதற்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்தார்கள். அனைவருக்கும் இனிப்புகள், தேனீர் வழங்கப் பட்டது.