மதுரை கிழக்கு தாலுகாவில் நெல்பயிறைத் கடுமையாக தாக்கிய செந்தாழை நோயைக் கட்டுப்படுத்த கோரியும்,
நீர் வழிப்பாதை களின் ஆக்கிரமிப்பு களை அகற்றிட கோரியும், வீட்டு மனைப் பட்டாக் கேட்டு காத்திருக்கும் தகுதியானவர்
களுக்கு உடனே வழங்கிட கோரியும், வீட்டு மனை பட்டா கேட்டு பல மாதங்களாக காத்திருக்கும் தகுதியானவர்
களுக்கு உடனடியாக வழங்கிட கோரியும், மனுக் கொடுத்து ஆறு மாதமாக காத்திருக்கும் விவசாயி நாயக்கன்பட்டி பெருமாள் மனுவின் மீது நடவடிக்கை எடுத்திட கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை கிழக்கு ஒன்றியக் குழு சார்பில் யா.நரசிங்கத்தில் உள்ள கிழக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிழக்கு ஒன்றியச் செயலாளர் தனசேகரன், தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் வேல்பாண்டி பேசினார். தொடர்ந்து கோரிக்கைளை வலியுறுத்தி விவசாய சங்கக் ஒன்றியத் தலைவர் சேகர், மற்றும் மலர், சேக்கப், ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகா செயலாளர் கலைச்செல்வன் வாழ்த்தி பேசினார். மாவட்டச் செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார். விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
