குடவாசல் அருகே உள்ள தேதியூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஓரங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் பழ செடிகள் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே தேதியூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் பழ செடிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா பன்னீர்செல்வம், உதவி தோட்டக்கலை அலுவலர் சிவமணி மற்றும் ஊராட்சி செயலாளர் செல்வி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் சுமார் 200 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.