திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் மேலப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் மருதையன் (53). இவர் அப்பகுதியில் திமுக கிளை செயலாளராக இருந்தார். இவர் கடந்த ஆறாம் தேதி வயலுக்கு உரம் தெளிக்க சென்ற போது பாம்பு கடித்து விட்டது. இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார். பாம்பு கடித்து இறந்து போன மருதையனுக்கு பவானி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இது தொடர்பாக வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.