திருவாரூரில் கொட்டும் மழையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.. திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே சந்திப்பு முகப்பு வாயிலில் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் வி கே கே ராமமூர்த்தி தலைமை வகித்தார். தஞ்சை மண்டல தலைவர் எல் செந்தில்நாதன் மாநில துணைத்தலைவர் மன்னார்குடி சு ஞானசேகரன் திருவாரூர் மாவட்ட செயலாளர் எம் ஆதப்பன் திருவாரூர் மாவட்ட பொருளாளர் எஸ் எம் டி கருணாநிதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வணிகர்களுக்கு சுமையாக கடைகளில் வாடகை மீதான வரிவிதிப்பை திரும்ப பெற வேண்டும் மாநில அரசு ஆண்டுதோறும் ஆறு சதவீதம் கூடுதல் சொத்து வரி விதிப்பை திரும்ப பெற்றிட வலியுறுத்தியும் வணிக உரிமை கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் குப்பை வரி மாநில முழுவதும் ஒரே சீராக அறிவித்திட வேண்டும் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்ட நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட துணைத் தலைவர் கணேஷ் கலர் லயன் எஸ் மோகன் மாவட்ட செய்தி தொடர்பாளர் பி முரளி மாவட்ட தொகுதி செயலாளர் அச்சுதை தே முருகதாஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடராஜன் அமைப்பின் வர்த்தக சங்க தலைவர்கள் திருத்துறைப்பூண்டி கே எஸ் செந்தில்குமார் மன்னார்குடி ஆர்வி ஆனந்த் முத்துப்பேட்டை ஜி அருணாச்சலம் நீடாமங்கலம் பி ஜி ஆர் ராஜாராமன் அம்மையப்பன் ஜி லட்சுமணன் பேரளம் கலை மோகன் எரவாஞ்சேரி சாந்தகுரு நன்னிலம் செல் சரவணன் மாவட்டத் துணைத் தலைவர்கள் எடையூர் சங்கந்தி அய்யா தேவர் குடவாசல் பிரபாகரன் மன்னார்குடி பாரதி ஜீவா சேதுராமன் ரத்தினசபாபதி வலங்கைமான் பாரத் ஆழ்வார் சாய் பிரபு செந்தில் மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் உறுப்பினர்கள் சேவை சங்கங்கள் நுகர்வோர் அமைப்புகள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட நிகழ்வின் இறுதியாக மாவட்டத் துணைத் தலைவர் கொரியர் எஸ் மதிவாணன் நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *