தஞ்சாவூர் மக்களுக்காக புதிய ரயில்கள் கோரிக்கைகளை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணாவை சந்தித்து தமிழக பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு.முருகானந்தம் கோரிக்கை.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர், தமிழக பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு.முருகானந்தம் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் வரதராஜன், மயிலாடுதுறை வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் செயல் உறுப்பினர் ரேவந்த்குமார் ஆகியோர் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணாவை சந்தித்து பல்வேறு ரயில் கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

இதில், தஞ்சாவூர் – விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் – காரைக்கால் இரட்டை ரயில் பாதை.தஞ்சாவூரில் இருந்து பெங்களூர், சென்னைக்கு வந்தே பாரத் விரைவு ரயில்.ஈரோடு – திருச்சி எக்ஸ்பிரஸ் மற்றும் புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ் காரைக்கால் வரை நீட்டிப்பு.
தாம்பரம் – ராமேஸ்வரம் கம்பன் தினசரி எக்ஸ்பிரஸ் வழி பட்டுக்கோட்டை – முத்துப்பேட்டை – அறந்தாங்கி
மயிலாடுதுறை – பட்டுக்கோட்டை – காரைக்குடி விரைவு ரயில் (சோழன் இணைப்பு).தஞ்சாவூர் – ஹைதராபாத்துக்கு புதிய ரயில். போன்ற கோரிக்கைகள் கனிவோடு கேட்டு அனைத்து கோரிக்கைகளையும் முக்கியமானதாக கருதி நிறைவேற்றி தருவதாக ரயில்வே அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *