எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் கடைசி ஒன்றிய குழு கூட்டம் கண்ணீருடன் புண் படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என கையெடுத்து கும்பிட்ட ஒன்றிய பெருந்தலைவர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைவதால் கடைசி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமையில் நடைபெற்றது.21 ஒன்றிய குழு உறுப்பினர்களில் 17 ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இதில் பேசிய ஒன்றிய குழு உறுப்பினர்கள் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையாக செயல்பட்டு,மக்களுக்கு தேவைக்கான வளர்ச்சி திட்ட பணிகளை செய்து தந்த பெருந்தலைவருக்கு நன்றியை தெரிவித்தனர்.தொடர்ந்து பேசிய ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் 5 ஆண்டுகள் கடந்ததே தெரியவில்லை,கட்சி பாகுபாடின்றி ஒரே குடும்பம் போல பயணித்தோம் என அழுது கொண்டே பேசினார். இந்த 5 ஆண்டுகளில் ஏதேனும் புண் படுத்தும் படி நடந்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என கைக்கூப்பி கண்ணிருடன் கேட்டுக்கொண்டார்.இந்த கூட்டத்தில் துணை பெருந்தலைவர்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.