திருநங்கைகள் வள மையம் – மதுரை மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் சமூகப்பணித் துறை இணைந்து ஒருங்கிணைத்த, மதுரையில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான இந்தியாவின் முதல் இலக்கியம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய விழா மற்றும் திருநங்கைகளுக்கு அடையாளம் மற்றும் அதிகாரமளித்தல் குறித்த தேசிய மாநாட்டில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி உரையாற்றினார்.
உடன் சுற்றுலாத்துறை நிர்வாக இயக்குனர் திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ் இஆப., தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் திருமதி. குமரி, கல்லூரி முதல்வர் டாக்டர். ராமசுப்பையா, கல்லூரி இயக்குனர் திரு. பிரபு, கல்லூரி செயலாளர் திரு. விஜயராகவன், கல்லூரி சமூகப்பணி துறைத்தலைவர் திருமதி. கிருஷ்ணவேணி மற்றும் சமையல் கலைஞரான திருநங்கை ராசாத்தியம்மாள், நாட்டுப்புற கலைஞர்களான திருநங்கைகள் தர்மம்மாள், கலைச்செல்வி, தனலட்சுமி, நாடகக் கலைஞர் ஆன திருநங்கை இராணியம்மாள் உள்ளிட்டோர்.!