கோவையை சேர்ந்தவர் சந்தோஷி ராஜேஷ்
க்ரிஷ் சார்டேபிள் டிரஸ்ட் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் இவர் பல்வேறு சமூகம் சார்ந்த நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கோவையில் ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்வது மற்றும் அரசு மருத்துவமனை முன்பாக உள்ள பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கி வரும் சேவையை தொடர்ந்து செய்து வரும் கோவை ஜீவசாந்தி அறக்கட்டளையின் சமூக பணியை அறிந்த க்ரிஷ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சந்தோஷி ராஜேஷ் ஜீவசாந்தி அறக்கட்டளைக்கு தமது க்ரிஷ் அறக்கட்டளை சார்பாக நிதி உதவி வழங்கும் விதமாக காசோலையை வழங்கினார்.
கோவை அரசு மருத்துவமனை முன்பு உள்ள ஏழை எளிய மக்கள் 300க்கும் மேற்பட்டோர்
மதிய உணவு வழங்கினார்.மேலும் ஆதரவற்றோர் உடல்களை அடக்கும் செய்யும் பணியில் நேரில் இவரும் ஈடுபட்டார்.மாத மாதம் இந்த பணியில் இவர் தொடர்ந்து ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார்.
ஜீவசாந்தி அறக்கட்டளையின் சமூக பணியில் தமது பங்களிப்பையும் அளிக்கும் விதமாக சந்தோஷி ராஜேஷ் தம்மையும் ஈடுபடுத்தி நிதி உதவியும் வழங்கி உள்ளதை பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.