கோவையில் லேப் கிரவுண்ட் டைமண்ட்ஸ் (L.G.D) ஆபரணங்களுக்கான மிஷ்கா ஜுவல்லரி துவக்கம்
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மிஷ்கா எனும் ஆய்வக வைர நகைகளுக்கான ஜுவல்லரியை பிரபல நடிகை கி.கி.விஜய் திறந்து வைத்தார்..
புதிய நவீன தொழில் நுட்பம் வாயிலாக தயார் செய்யப்படும் லேப் கிரவுண்ட் டயமண்ட்ஸ் எனப்படும் ஆய்வக வைரங்களில் செய்யப்படும் வைர நகைகளை அணிவதில் தற்போது பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உண்மையான வைரங்களுக்கு சிறிதும் வேறுபாடு இல்லாமல் இருக்கும் இந்த வைரங்கள் பதித்த ஆபரணங்கள் விற்பனை செய்யும் புதிய மிஷ்கா எனும் ஜுவல்லரி கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் துவங்கப்பட்டது..
மிலானா,சியாமளா, கார்த்திகேயன்,
ஆகிய மூவர் இணைந்து துவங்கியுள்ள இந்த மிஷ்கா ஆய்வக வைர நகை ஆபரணங்கள் ஜுவல்லரியை பிரபல நடிகை,கீ.கீ.விஜய் திறந்து வைத்தார்..
இதில் பேசிய அவர்,தற்போது அழகான கற்கள் பதித்த ஆபரணங்களை அணிவதி்ல் ஆர்வம் காட்டுபவர்கள் அதிகரித்து உள்ளதாகவும்,குறிப்பாக இயற்கை வைரங்களுக்கு இணையான இந்த வைர ஆபரணங்களில் இங்கு அதிக டிசைன்களில் விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்தார்..
மிஷ்கா ஜுவல்லர்ஸ் ஆபரணங்களை சொந்த உபயோகத்திற்கு வாங்குமவர்கள் மட்டுமின்றி மற்றவர்களுக்கு பிறந்தநாள்,
திருமணம் பொன்ற விழாக்களுக்கு பரிசு வழங்க நினைப்பவர்களுக்கு மிஷ்காவில் அனைத்து விதமான கலெக்ஷன்ஸ் இருப்பதாக மிஷ்கா ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர்கள் மிலானா,சியாமளா,கார்த்திகேயன் ஆகியோர் தெரிவித்தனர்…