திண்டுக்கல் நகர் தனியார் மருத்துவமனையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி உதவி தொகையை அமைச்சர்கள் ஆறுதல் கூறி வழங்கினர்

திண்டுக்கல் நகர் சிட்டி எலும்பு முறிவு தனியார் மருத்துவமனையில் தீ விபத்தையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண நிதி உதவியை
இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவரது வழிகாட்டுதல் படி
கழகத் துணைப் பொதுச் செயலாளர் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்.திண்டுக்கல் ஐ.பெரியசாமி மற்றும்
திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு அர.சக்கரபாணி இவர்களுடன்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் மா. சுப்பிரமணியன் மற்றும்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர். ஐ பி செந்தில்குமார் ஆகியோர்
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி நிவாரண நிதி உதவி தொகையை வழங்கினர்.
உடன், மாவட்ட ஆட்சித் தலைவர்.பூங்கொடி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர்.காந்திராஜன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், மாநகராட்சி மேயர்.இளமதி ஜோதி பிரகாஷ்,துணை மேயர்.ராஜப்பா, ஒன்றிய செயலாளர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *