கோவையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி, சிறந்த சமூக செயல்பாட்டளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்..
கல்வி,மருத்துவம்,சமுதாய நல்லிணக்கம் போன்ற சமூக பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றி வரும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா கோவை பீளமேடு மணி மகால் அரங்கில் நடைபெற்றது..
கோரா என்டர்டைன்மென்ட் மற்றும் தமிழன் டிவி சார்பாக நடைபெற்ற இதில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சமூக ஆர்வலர்களுக்கும் தொழில் அதிபர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..
இதில் சிறப்பு விருந்தினர்களாக,பிரபல நடிகர் பாண்டியராஜன் மற்றும் தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் விருதுகளை வழங்கினார்கள்..
இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு திமுக மாவட்ட துணை அமைப்பாளர் சமூக ஆர்வலர் டிஸ்கோ காஜா பல் சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அபுதாஹீர் கோவை தல்ஹா, ஹக் உட்பட பலர் கலந்து கொண்டனர்..