தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் “24 ஆம் ஆண்டு ” . “மகா கார்த்திகை தீபத் திருவிழா கைலாசநாதர் அருள் ஆசியுடன், இனிதென நடைபெற்றது. மகா கார்த்திகை தீப ஜோதி தரிசனம் செய்து. எம்பெருமான் கைலாசநாதர்
இறையருள் பெற்றுச் சென்றனர். மேலும் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவின் தலைவர் வி.ப.ஜெயபிரதீப் அவர்கள் சார்பில் அடிவாரத்தில் வி.ப.ஜெ பசுமை உலகம் நர்சரி சார்பாக இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேல் வந்த யாசகர்களுக்கு சோளனா பையில் போர்வை வேஷ்ட்டி, துண்டு தட்டு டம்ளர், வாட்டர்பாட்டில் பிஸ்கட், உணவு பொட்டலம், இத்துடன் தட்சனை வைத்து கொடுக்கபட்டது அதை தொடர்ந்துஅன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்னதானத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கும் , சாமி தரிசனம் செய்ய வந்தவர்களுக்கும் சிறப்பாக பாதுகாப்பு கொடுத்தனர் காவல் துறையினர், மற்றும் தென்கரை பேருராட்சி நிர்வாகத்தினர் சிறந்த பணிகளை செய்திருந்தனர்.
