ராஜபாளையம் எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் வாசகர் மன்ற விழா நடத்தப்பட்டது .சிறப்பு விருந்தினராக சைல்டு ஸ்கூல் பவுண்டர் ஜெயஸ்ரீ அசோக் அவர்கள் கலந்து கொண்டு புத்தகத்தில் குறிப்பெடுப்பது பற்றியும் ,கல்வி சாதனைக்கு வலுவான வாசிப்பு திறன் முக்கியமானது என்றும் நன்றாக வசிக்கும் மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சிறந்து விளங்குவார்கள் என்று சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமாரி வரவேற்புரையாற்றினார்.கல்லூரி முதல்வர் ஜமுனா தலைமையுரையாற்றினார்.கல்வி ஆலோசகர் சங்கரநாராயணன் அறிமுக உரையாற்றினார்.மாணவி காயத்ரி லட்சுமி நன்றியுரை கூறினார் .