திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர் ஏக்கருக்கு 30000 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் வலியுறுத்தல்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்களம் மணக்கரை புள்ளமங்கலம் சேந்தங்குடி விக்கிரபாண்டியம் இருள்நீக்கி உள்ளிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கதிர் வரும் நிலையில் சம்பா பயிர்கள் பேரழிவு பெருமழையால் நீரில் மூழ்கி அழுகி வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் வடபாதிமங்கலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுமையிலும் பேரழிவு பெருமழையால் மிகப்பெரும் அழிவை விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள். ஒருபோக சம்பா சாகுபடி பயிர் வளர்ந்து நல்ல மகசூல் கொடுக்கும் என்று நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு இடி விழுந்தார் போல பேரழிவு பெருமழையால் சம்பா பயிர்கள் கதிர் பிடிக்கும் நிலையிலும், கலப்பு கதிர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சாய்ந்து அழுகி வருகிறது. இதனை கண்டு விவசாயிகள் மனமுடைந்துள்ளனர்
பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 30,000 ம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
மகசூல் இழப்பை சந்திக்கும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு பெற்று தருவதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை கிராமங்கள் தோறும் கணக்கெடுப்பு பணிகளை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க முன்வர வேண்டும்
ஏற்கனவே தமிழ்நாடு அரசு ஹெக்டேர் ஒன்றுக்கு 17 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கியிருப்பது யானை பசிக்கு சோளப்பொரி போன்றதாகும் எனவே இழப்பீடு குறித்து மறு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்
மாநில துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார் திருவாரூர் மாவட்ட தலைவர் எம் சுப்பையன், மன்னை மேற்கு ஒன்றிய செயலாளர் பிகே.கோவிந்தராஜ் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பஞ்சநாதன் வடபாதிமங்கலம் மைய செயலாளர் மாரியப்பன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்