கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
பாபநாசம் அருகே கருப்பூர் கிராம மக்களுக்கு பி.ஆர். அம்பேத்கர் ரத்த சேவை மையம் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கருப்பூர் பகுதியில் மூன்று நாட்கள் பெய்த கனமழையின் காரணமாக மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கருப்பூர் கிராம மக்களுக்கு டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ரத்த சேவை மையம் மற்றும் டாக்டர் திருமா இரத்த சேவை மையம் இணைந்து உணவு வழங்கினர்..
இந்நிகழ்ச்சியில் டாக்டர் அம்பேத்கர் ரத்த சேவை மைய நிர்வாகிகள் சத்யராஜ், தோழர் விக்னேஷ், இயக்குனர்கள் நவீன் ,வழக்கறிஞர் குகன், தனுஷ், செயலாளர்கள் அருண் சபரிவாசன், சுதாகர் ,வெற்றிவாசன் மற்றும் டாக்டர் அம்பேத்கர், டாக்டர்.திருமா ரத்த சேவை மைய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.