கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்கா திருப்பழனம் பகுதியில் உள்ள சிறுபுலியூர், ராயன்பேட்டை ,கார்குடி, பருத்திகுடி அம்மாள் , திங்களூர் ,70பெரமூர், தென்னஞ்சேரி, குண்டக்குடி ,ஆச்சனூர் ஆகிய கிராமங்களில் இடுப்பளவு தண்ணீரில் சுமார் 15.000ஆயிரம் ஏக்கர் இளம் நடவு நெல்பயிர்கள் முழுவதும் முழுகி கடல்போல் தண்ணீர் சூழ்த்து பயிரிடப்பட்ட நெற்பயிர் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் கே.எஸ் முகமது இப்ராஹிம் மாநில துணை அமைப்பாளர்.G ஜீவாநத்தம் திருப்பழனம் ஊராட்சி மன்ற தலைவர். பிரபாகரன். தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் சிறுபுலியூர் கிளை தலைவர். சுரேஷ் மற்றும் கிராம மக்கள் பார்வையிட்டார்கள்
உடனடியாக பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் வேளாண்மை துறை இணை இயக்குநர் உதவி இயக்குனர் மற்றும் இது சம்பந்தமான அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு உரிய வெள்ளம் நிவாரணம் நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்