மூன்று வயது முதல் 35 வயது வரையிலான ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வண்ணப்பட்டையங்கள் பெற்று அசத்தல்
கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளி சார்பாக நடைபெற்ற கராத்தே பட்டைய தேர்வில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக 64 வது கராத்தே பட்டைய தேர்வு போட்டி சரவணம்பட்டி பகுதியில் உள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தி்ல் நடைபெற்றது. இதில் பிரவுன், பச்சை, மஞ்சள்,, புளு, ஆரஞ்சு,கருப்பு உள்ளிட்டவற்றில் பட்டையம் வழங்குவதற்கான தேர்வில் 3 வயது முதல் 35 வயது வரை உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியின் தலைவர் தியாகு நாகராஜ் கலந்து கொண்டு பட்டையம் பெறுவதற்கான கராத்தே போட்டியை நடத்தி வீரர்களை தேர்வு செய்தார்.
இதில், கட்டா, கராத்தே உள்ளிட்ட பிரிவுகளில் கருப்பு பட்டை பெற்ற தலைமை பயிற்சியாளர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்களும் பட்டையங்களும் வழங்கப்பட்டது.
இதில் பிரனேஸ்வர்,தர்ஷன்,வர்னிகா
அவ்யுக்த்,தன்வந்த் ஸ்ரீ ஹரி,ஹரிஷ்குமார்,ஜானகிராமன்,
தோகித்,பரமேஷ்வரி,பிரணவ்,எமிமல்,ஹன்ஷிகா உள்ளிட்ட 12 பேர் கருப்பு பட்டையம் பெற்றனர்…
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை துணை தலைவர் சிவ முருகன் செயலாளர் அரவிந்த்,மற்றும் பயிற்சியாளர்கள் சரவணன்,விமல்,தேவதர்ஷினி,பிரசாந்த், ஆல்வின்,எட்வின்,சாமுவேல் ஆகியோர் செய்திருந்தனர்..