ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் பூமி பூஜை
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிறுநாவலூர் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று தாட்கோ நிதியின் கீழ் ரூ 1. 40 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாய கட்டிடம் கட்டுவதற்காக ஊராட்சி மன்றத்தலைவர் பொறியாளர் சுப்பிரமணியன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.இதில் துணைத் தலைவர் பாஸ்கர் கிளர்க் மதன்,கவுன்சிலர் கண்ணதாசன், கிளைச் செயலாளர் கலைமணி, அறநிலைத்துறை ரவி மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் பூமி பூஜை நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்