பொள்ளாச்சி
பொள்ளாச்சியை அடுத்த மனக்கடவில் உள்ள வானவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தின் நான்காவது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது இதில் இதில் சக்தி குழும இயக்குனர் தரணிபதி ராஜ்குமார் வரவேற்பு உரை ஆற்றினார்
வேளாண்மை கல்லூரியின் முதல்வர் கே பிரபாகரன் இந்த ஆண்டுக்கான கல்வி அறிவிக்கையை சமர்ப்பித்தார் விழாவில் சிறப்பு விருந்தினராக பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் துசார் கன்தி பெஹெரா கலந்து கொண்டு மாணவ மாணவர்களிடம் உரையாற்றினார்
அப்போது பேசிய அவர் இந்தியாவின் பொருளாதாரம் வேலைவாய்ப்பு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பும் வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களைப் பற்றியும் குறிப்பிட்டார்
இறுதியாக விவசாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் உந்து சக்தியாக பார்க்குமாறும் கல்வியை பயன்படுத்தி மாற்றத்தை உருவாக்க மாணவ மாணவிகள் பாடுபட வேண்டும் என கூறினார் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியின் இளநிலை வேளாண்மை பட்டப் படிப்பு முடித்த 320 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது
மேலும் கல்லூரி அளவில் 5 தங்கம் 5 வெள்ளி 6 வெங்கல பதக்கங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்