R. கல்யாண முருகன்
விருத்தாசலம்
விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தினம் கொண்டாடப்பட்டது.
டிசம்பர் 17 ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாநில செயலாளர் அண்ணாதுரை தலைமையில் மாவட்டத் தலைவர் அருணகிரி சங்கக் கொடி ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் சங்க கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதி, 70 வயது முடிந்தவர்களுக்கு 10% சிறப்பு ஓய்வூதியம் என்ற வாக்குறுதி, எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்படும் என்ற உறுதிமொழி, திருத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி, விருத்தாசலத்தை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்ற வாக்குறுதி போன்ற வாக்குறுதிகள் அனைத்தும் கானல் நீராக உள்ளது என்றும், ஓய்வூதியத்தை முடக்க பார்க்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும், நிலுவையில் உள்ள நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் எனவும் கூட்டத்தில் பேசப்பட்டது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.