வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட செந்தமிழ் நகர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி செந்தமிழ் நகர் குடியிருப்பு பகுதியில் செந்தமிழ் நகர் பள்ளிவாசல் எதிர்ப்புறம், பிள்ளையார் கோவில் பின்புறம் ஆகிய இடங்களில் 4அடி தண்ணீர் தேங்கி நிற்கிறது. வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதிலிருந்து பாம்புகள், விஷ பூச்சிகள் வெளி வருகின்றது. அசுத்தமான தண்ணீர் தேங்கி நிற்கிறது, மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.