கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
சொத்து வரி ஜி எஸ் டி வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து பல்லடத்தில் 80 சதவீதம் கடைகள் அடைப்பு…..
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஜிஎஸ்டி வரி சொத்துவரி உயர்வு வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவித ஜி எஸ் டி வரி மின் கட்டண உயர்வு போன்றவற்றால் ஏற்பட்டுள்ள தொழில் முடக்கத்தை கண்டித்து காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை மாபெரும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்லடத்தில் முக்கிய பகுதிகளில் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளது மேலும் இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டுள்ளது.
