கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
திருப்பூர் வருகை தரவுள்ள துணை முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்…..
பல்லடத்தில் நடைபெற்ற பாரத் பெட்ரோலியம் குழாய் எதிர்ப்பு ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் முடிவு………
திருப்பூர் மாவட்டம் பல்லடத்திக்கு உட்பட்ட கண்டியன் கோவில் சுக்கம்பாளையம் பெருமாள் கவுண்டன் பாளையம் உள்ளிட்ட ஏழு பகுதிகளில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தால் பதிக்கப்படும் எண்ணெய் குழாய்க்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 20 நாட்களுக்கு மேலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் அதற்கான ஆலோசனைக் கூட்டமானது பல்லடம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது தொடர்ந்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறுகையில் திருப்பூர் வரவுள்ள துறை அமைச்சரை நேரில் சந்தித்து குழாய்களை சாலை மார்க்கமாக கொண்டு செல்ல வலியுறுத்தி மனு ஒன்று அளிக்கப்பட உள்ளதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் இத்திட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதால் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார் மேலும் இந்த விவசாய நிலங்கள் வழியாக என்னை குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு சாலை மார்க்கமாக கொண்டு செல்ல வழி செய்யும் வரை இந்த போராட்டம் ஆனது தொடர்ந்து நடைபெற்று வரும் எனவும் அவர் தெரிவித்தார். பேட்டி: திரு. ஈசன் முருக சாமி. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர்.