R. கல்யாண முருகன்.
விருத்தாசலம்.
விருத்தாசலம் அருகே சாத்தியம் கிராமத்தில் முறையான குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சாத்தியம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் அப்பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் வழங்க கோரியும், அடிப்படை வசதி செய்து தரக்கோரியும் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் இன்று விருத்தாசலம் சேலம் செல்லும் சாலையில் சாத்தியம் பேருந்து நிலையம் முன்பு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனை அறிந்த வருவாய்த்துறைனர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதி மக்களிடம் சமாதானம் செய்தனர்.
பின்னர் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் ஆர்.
ராதா கிருஷ்ணன் அவர்கள் விரைவில் தீர்வு காண்பதாக கூறியதை எடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.