திருவாரூர் நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலாக இளையோர் திருவிழாவினை கலெக்டர் சாருஸ்ரீ துவக்கிவைத்தார்.
திருவாரூர் டிச 18 மத்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் இளைஞர்களின் ஆற்றல்மிகு திறன்களை வெளிக்கொண்டுவரும் விதமாக இளையோர் திருவிழாவானது நேற்று திருவாரூர் அருகே அம்மையப்பனில் இயங்கி வரும் பாரத் கல்லு£ரியில் தாளாளர் காலைகதிரவன் தலைமையிலும், கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதனை கலெக்டர் சாருஸ்ரீ துவக்கி வைத்து பேசுகையில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ ஆயிரம் உதவிதொகை வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு சிறப்புவாய்ந்த திட்டங்கள் செயல்படுத்தபடுகின்றன. மேலும் கல்வி மட்டுமின்றி கலை திருவிழாவினையும் தமிழக அரசு நடத்தி வருவதை போன்று நேரு யுவகேந்திரா சார்பிலும் கலைதிருவிழாவானது நடைபெறுகிறது.
எனவே இதனை திருவாரூர் மாவட்ட இளைஞர்களும், மாணவ, மாணவிகளும் பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார் மேலும் விளையாட்டுதுறை சமூகநலத்துறை வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் கலைதிருவிழாவினை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி தனிநபர் போட்டி மற்றும் குழுப்போட்டி, இளம் எழுத்தாளர் போட்டி -(கவிதை), இளம் கலைஞர் போட்டி (-ஓவியம்) மற்றும் கைப்பேசி புகைப்பட போட்டி, குழு நடனப்போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதனைத் தொடர்ந்து வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியகுழு துணை தலைவர் பாலசந்திரன் மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மன்னை அரசு கல்லூரி பேராசிரியர் பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை நேரு யுவகேந்திராவின் திட்ட உதவியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்