பென்னாகரம் அருகே, நல்லானூர் பகுதியில் அமைந்துள்ள ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார்.ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சி.பரஞ்சோதி முன்னிலை வகித்தார்.
குழுமத்தின் செயலாளர் காயத்ரி கோவிந்த் வாழ்த்துரை வழங்கினார்.வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் அ.இம்தியாஸ் வரவேற்று பேசினார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ தேவி மஹா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை மற்றும் கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் நிறுவனத்தின் தேவி, நர்மதா ஆகியோர் பங்கேற்று பேசினர்.
நிறைவாக ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியை கோமதி நன்றி கூறினார்.
நிகழ்வை வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் அ.இம்தியாஸ் ஒருங்கிணைத்தார்.நிகழ்வில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.