கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு…
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெந்தேகோஸ்தே சபைகளின் மாமன்றம் சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.
இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,
அமைச்சர்கள் செந்தில் பாலாஜி,
கோ.வி.செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
எஸ்.பி.சி.(SPC) தலைவர் பேராயர் எடிசன் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார்.
தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் சாமுவேல் செல்லப்பாண்டியன் திராவிடமும் கிறிஸ்தவமும் குறித்து பேசினார்..
எஸ்.பி.சி்.யின் பல்வேறு கோரிக்கைகளோடு பிரதம பேராயர் டேவிட் பிரகாசம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
கடந்த மூன்று ஆண்டுகளாக ,
அனைத்து சமூகத்தின் மக்கள் மத்தியில் மத நல்லிணக்கத்தோடு ஆட்சி செய்து வரும், தமிழக முதல்வருக்கு பெந்தெகொஸ்தே சபைகளின் மாமன்றம் சார்பாக மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்..
அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் கிறிஸ்தவ சமத்துவ கல்லறைத்தோட்டம் அமைக்க நிலம் ஒதுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதின் அடிப்படையில்,. விரைவில் அரசு செய்து தரும் என்ற நம்பிக்கையுடன் காத்து இருப்பதாக அவர் தெரிவித்தார்..
தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கும் மின்சார இணைப்பை வழிபாட்டு தலத்திற்குரிய விதிகளின் கீழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விடுத்தார்..
தொடர்ந்து விழா மேடையில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
,உலகமே கொண்டாடும் விழா நமது கிறிஸ்மஸ் விழா எனக் கூறி அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
தான் படித்த பள்ளி டான்பாஸ்கோ, கல்லூரி படிப்பு லயோலா கல்லூரி என்ற உதயநிதி, நானும் ஒரு கிறிஸ்துவன் என பெருமைப்படுகிறேன் எனக் கூறிய அவர்,.அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பை தான் போதிக்கின்றன என்றார்.
திராவிட இயக்கம் இருக்கும் வரை, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்போம் எனக் கூறிய அவர்,
கிறிஸ்தவ மக்கள் வைத்த கோரிக்கைகள், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்..
நிகழ்ச்சியில் எஸ்.பி.சி.பொருளாளர் ஜான்சன் கிருபாகர பாண்டியன் உட்பட
பல்வேறு பெந்தேகோஸ்தே சபைகளின் போதகர்கள்,சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.