கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே கிருஷ்ணாபுரத்தில் மழையில் பாதிக்கப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு வழங்க வலியுறுத்தி வயலில் இறங்கி அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கிருஷ்ணாபுரம் அண்டக்குடையான், சிவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழையினால் பாதிக்கப்பட்டு நீரில் மூழ்கி அழுகிய பயிர்களை கணக்கெடுக்க வராத அதிகாரிகளை கண்டித்தும் , தாழ்த்தப்பட்ட ஏக்கருக்கு ரூபாய் ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டி அழுகிய பயிர்களை கையில் ஏந்தி விவசாயிகள் வயலில் இறங்கி
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் ஏ. எம். ராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், சின்னதுரை, ராஜேந்திரன், மரிய சூசை உள்ளிட்ட நிர்வாகிகள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டு கண்டனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.