நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை கண்டித்து இலத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் திருவாதூர் பவுஞ்சூர் பஜார் வீதியில் அமித்ஷாவின் உருவ பொம்மையுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.உடன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெளிக்காடு வே.ஏழுமலை மற்றும் ராஜேந்திரன், ஒன்றிய துணை அமைப்பாளர் கா.ஏமநாதன், இளைஞர் அணி அமைப்பாளர் கே.எஸ்.ஆர். கார்த்திகேயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.